Tamilmusic(Thevaram)

Saturday, May 13, 2006

THIRU BRIMHAPURAM PANN


1.1 திருப்பிரமபுரம்பண் - நட்டபாடை
1
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.1
2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டுவற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.2
3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடிஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.3
4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.4
5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.5
6
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.6
7
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்தஉடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.7
8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.8
9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.9
10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லாஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.10
11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேயபெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னைஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்ததிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.
1.1.11திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.திருச்சிற்றம்பலம்

1 Comments:

At 3:04 PM, Blogger Dr.M.Bala Tharmalingam said...

Vanakkam!

We are Malaysia Hindu Sangam amist of organising our 30th year of annual
Thirumuai Vizha. In conjunction to this we are arranging a special
exhibition on Thirumurai at Batu Caves Malaysia.

Please help us to get the portrait or images of the 27 Thrumurai Authors.

Thank You

Dr.M.Bala Tharumalingam
National Chairman - Arts & Culture
Malaysia Hindu Sangam

 

Post a Comment

<< Home